‘ஆதார்’ இல்லாமல் பள்ளிக்கல்வித் துறைக்கான திட்டங்களைப் பெற முடியாது: புதிய அறிவிப்பு

1 mins read
0b330ed4-868d-437d-a1bf-6548e0dffadf
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பெற்றிட ஆதார் அட்டை கட்டாயம் எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. - கோப்புப் படம்

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்றிட ஆதார் அட்டை கட்டாயம் எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

இதன்படி, பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்படவுள்ள திட்டங்கள்மூலம் பயன்பெற விழையும் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படுகிறது.  

ஆதார் சட்டம் 2016 ஏழாம் சட்டப் பிரிவின்படி இந்த அறிவிப்பு தரப்பட்டுள்ளதாக அரசு செய்தியறிக்கை குறிப்பிட்டது.

தமிழ்நாட்டில் பிறப்பு சான்றிதழ், கடவுச் சீட்டு, வாக்காளர் அட்டை மகளிர் உரிமை தொகை, வங்கிக் கணக்குப் பதிவு செய்தல் எனச் சகலவற்றிற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று உள்ள நிலையில், தற்போது கல்வித்துறையின் நல்வாழ்வுத் திட்டங்களைப் பெற்றிடவும் இந்த அதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்புச் சொற்கள்