புதுடெல்லி: இந்தியாவில் அதிகமாக கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு 96.2 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
அந்த எண்ணிக்கை லட்சத்தீவில் 91.85% ஆகவும், மிசோரமில் 91.33% ஆகவும் இருப்பதாக இந்திய கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், ஏழு வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் மாநில வாரியான கல்வியறிவு குறித்து தேசியப் புள்ளியியல் அலுவலகமும் தேசிய மாதிரி ஆய்வின் 75வது சுற்றின் ஒரு பகுதியாக ஆய்வு நடத்தியுள்ளது.
அந்த அறிக்கைகள் சராசரியாக இந்தியாவில் கல்வியறிவு நகர்ப்புறங்களில் 77.7 விழுக்காடாகவும் கிராமப்புறங்களில் 87.7%, 73.5% ஆகவும் உள்ளதாகக் கூறுகின்றன.
மாநில வாரியான கல்வியறிவு குறித்த பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் 96.2 ஆகும். 91.58 விழுக்காடுடன் மிசோரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த நிலைகளில் உள்ள மாநிலங்கள்: டெல்லி 88.7%, திரிபுரா 87.75%, உத்தராகண்ட் 87.6%, கோவா 87.4% , இமாச்சலப்பிரதேசம் 86.6% , மகாராஷ்டிரா 85.9%, தமிழ்நாடு 80.9%.
நாட்டிலேயே குறைந்த கல்வியறிவு கொண்ட மாநிலமாக பீகார் உள்ளது. அம்மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் 61.8% ஆகும்.