விஜய்யைச் சந்தித்த திரிஷா; திருச்சி கிழக்கில் போட்டியிடுவார் எனத் தகவல்

விஜய்யைச் சந்தித்த திரிஷா; திருச்சி கிழக்கில் போட்டியிடுவார் எனத் தகவல்

1 mins read
242125fe-4724-469b-8e4e-7119867af036
மே 4ஆம் தேதி பிறந்தநாள் என்பதால் விஜய்யிடம் வாழ்த்து பெறுவதற்காகத் திரிஷா வந்ததாகக் கூறப்பட்டது. - படம்: ஈடிவி பாரத்

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை (மே 4) வெளியான நிலையில், நடிகை திரிஷா யாரும் எதிர்பாராத வகையில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்தார்.

வாக்குகள் எண்ணப்பட்டபோது தவெக நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாகத் தகவல் வெளியானதை அடுத்து, அக்கட்சித் தலைவர் விஜய் வீடு, பனையூர் கட்சி அலுவலகம் முன்பு ஏராளமானோர் கூடினர்.

இந்நிலையில், நடிகை திரிஷா விஜய் வீட்டுக்கு வருகைதந்தார். அவரது பிறந்தநாள் மே 4ஆம் தேதி என்பதால் விஜய்யிடம் வாழ்த்து பெற வந்ததாகக் கூறப்பட்டது.

விஜய் வீட்டுக்குள் செல்லும் முன்பு தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தபடி சென்ற திரிஷா, அங்கிருந்து புறப்படும்போது, வெற்றியைக் குறிப்பிடும் வகையில், தனது வலது கையின் பெருவிரலை உயர்த்திக் காட்டினார்.

இதையடுத்து தொண்டர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகம் அடைந்தனர்.

இதனிடையே, தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கில் நடிகை திரிஷா போட்டியிடக்கூடும் என்று ஊகங்கள் பரவுகின்றன.

திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் விஜய் முன்னிலை வகிக்கும் நிலையில் அவர் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவார் என்றும் அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் நடிகை திரிஷா போட்டியிடுவார் என்றும் ஊகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்