சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் முதற்கட்டமாக விஜய் உட்பட 10 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
புஸ்ஸி என்.ஆனந்த்
ஆதவ் அர்ஜுனா
கே.ஜி.அருண்ராஜ்
கே.ஏ.செங்கோட்டையன்
வெங்கடரமணன்
நிர்மல்குமார்
ராஜ்மோகன்
தொடர்புடைய செய்திகள்
டி.கே.பிரபு
கீர்த்தனா
120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் சனிக்கிழமை (மே 9) மாலை வழங்கினார். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) காலை 10 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தின் 18வது முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருடன் இந்த 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
ஒன்பது பேரும் தவெகவைச் சேர்ந்தவர்கள்.
இதனிடையே, தவெக ஆட்சியமைக்க ஆதரவு தந்துள்ள காங்கிரஸ் கட்சித் தரப்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் இருவரது பெயரும் அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

