தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவெக மாநில மாநாடு: களைகட்டும் மதுரை

1 mins read
4e1f5f93-cb82-4555-908d-e7752a9dc275
தவெக மதுரை மாநாட்டுக்கு பந்தக்கால் நடும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். - கோப்புப்படம்: ஊடகம்

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் 20 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாநாட்டுப் பணிகள் களைகட்டத் தொடங்கிவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 21ஆம் தேதியன்று, நடைபெறும் தவெக இரண்டாவது மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குடிநீர், பாதுகாப்பு, வாகனம் நிறுத்துமிடம், சுகாதார வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு நூற்று க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட உள்ளன.

மேலும், விஜய் படம் பொறிக்கப்பட்ட 5 லட்சம் குடிநீர் புட்டிகள் விநியோகிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவசர மருத்துவச் சேவை பணியில் சுமார் 400 மருத்துவக் குழுவினர் ஈடுபட இருக்கின்றனர். மாநாட்டில் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவக் குழுவினர் தயார்நிலையில் இருப்பர்.

மாநாட்டுத் திடலில் கூடியிருக்கும் லட்சக்கணக்கானோரில், யாரேனும் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக ‘டிரோன்’ மூலம் மருந்துப் பொருள்கள் அனுப்பப்படும எனத் தெரிகிறது. இந்த டிரோன்களில் 25 கிலோ மருந்துப் பொருள்கள் இருக்கும்.

மாநாடு நடைபெறும் நாளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதைச் சமாளிக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்