சென்னை: தமிழகச் சிறுவனின் பெயர் 11 உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.
சஞ்சய் கார்த்திகேயன் என்ற அந்த இரண்டு வயதுச் சிறுவனின் தந்தை கார்த்திகேயன், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி திவ்யா.
இத்தம்பதியரின் மகனான சஞ்சய், சிறார்களுக்கான புதிர்களுக்குத் தீர்வுகாண்பது, தேசபக்திப் பாடல்களைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒப்புவிப்பது, நிறங்களைப் பிரித்தறிவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று, இந்திய சாதனைப் புத்தகம், நோபல் உலக சாதனைப் புத்தகம் உட்பட 11 உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளான்.
மேலும், மேதைக் குழந்தை, உலக இளம் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகளும் இச்சிறுவனுக்குக் கிடைத்துள்ளன.
“தற்போது 195 நாடுகளின் கொகள் பெயர்களை ஒப்புவிக்கும் போட்டியில், குழந்தைகளுக்கான பிரிவில் பங்கேற்று 6 நிமிடம் 11 வினாடியில் வென்றுள்ளான் சஞ்சய்.
“12வது சாதனையாக, அனைத்துலக சாதனைப் புத்தகத்திலும் என் மகனின் பெயர் இடம்பெற உள்ளது,” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சாதனைச் சிறுவனின் தாய் திவ்யா.

