வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு

1 mins read
f8b0339b-2866-4f55-be38-086f8cbe14ff
வித்யா ராணி, சீமான். - படம்: ஊடகம்

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீரப்பன் மகள் வித்யா ராணி, நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து ஓராண்டுகூட முடியவில்லை. அதற்குள் அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுகிறது.

அண்மையில் சீமானிடம் சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சீமானைப் பார்க்க விசாரணை நடைபெற்ற காவல்நிலையத்துக்கு வந்த வித்யா ராணிக்கு, உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கண்ணீர்விட்டு அழுதார்.

குறிப்புச் சொற்கள்