வேல்முருகன்: விவசாயம், நீர்வளத்தை பாதிக்கும் தொழிற்சாலைகள் வேண்டாம்

1 mins read
85e05dc0-7a92-4034-b18d-cb095f3bed4e
வேல்முருகன். - படம்: ஊடகம்

தஞ்சை: தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம், நீர்வளத்தைப் பாதிக்கும் எந்த தொழிற்சாலையையும் கொண்டுவரக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை டெல்டா மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்றும் டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கொண்டு வரக்கூடாது. வேளாண் மண்டலங்களில் புதிய எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டக் கூடாது.

“பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

“பருவ மழை, பேரிடர் கால நிவாரண நிதிகளை மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு வழங்கியது இல்லை. ஜிஎஸ்டி வரி வசூலித்த தொகைகளைக் கூட வழங்கவில்லை. எனவே தமிழக அரசே நிவாரணத் தொகை வழங்கவேண்டும்,” என்றார் வேல்முருகன்.

குறிப்புச் சொற்கள்