திருமண நிகழ்வில் விஜய், திரிஷா ஜோடியாகப் பங்கேற்பு

திருமண நிகழ்வில் விஜய், திரிஷா ஜோடியாகப் பங்கேற்பு

படம்: புதுயுகம்/ஃபேஸ்புக்

06 Mar 2026 - 8:51 am

1 mins read

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒன்றாக கலந்துகொண்டது பொதுவெளியில் பேசுபொருளாகி இருக்கிறது.

ஒரு நடிகையுடன் தமது கணவர் விஜய் தொடர்பில் இருப்பதாக சங்கீதா தமது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் சென்று திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரபல ஏஜிஎஸ் படத்தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் மகனான கல்பாத்தி சுரேஷின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய், திரிஷா இருவரும் ஒரே நிற உடையில் காணப்பட்டனர். இருவரும் இயல்பாகப் பேசிச் சிரித்தபடி நிகழ்ச்சிக்கு வந்துசென்றது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்ததற்காகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அரசியல் களத்தில் யாரும் இது தொடர்பாக அவரைப் பெரிதாக விமர்சிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
விஜய்திரிஷாதவெகதிருமணம்மனைவிவிவாகரத்து