12 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் விஜய்

1 mins read
e9a4fa29-3c5e-487e-8e02-688f7427603d
கோவை வந்தடைந்த விஜய்க்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் திரளாகக்கூடி சிறப்பான வரவேற்பளித்தனர். - படம்: தமிழக ஊடகம்

கோவை: தவெக தலைவர் ஏறக்குறைய விஜய் ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கோயம்புத்தூருக்கு வருகை தந்தார்.

ஏப்ரல் 26ஆம் தேதி கோவை வந்தடைந்த அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் திரளாகக்கூடி சிறப்பான வரவேற்பளித்தனர். இதனால் கோவை விமான நிலையம் அருகே சாலைப் போக்குவரத்து நிலைகுத்தியது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரு நாள்களுக்கு அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க கட்சித் தலைவர் விஜய் தனி விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.

விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடைபெறும் இடம் வரை தவெகவினர் ஆங்காங்கே அவருக்கு வரவேற்பு வழங்கினர்.

குறிப்புச் சொற்கள்