சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்க்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் வாகனத்தை ஏன் காவல்துறை பறிமுதல் செய்யவில்லை என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி வருகிறது. இதையடுத்து, காவல்துறை பிரசார வாகனத்தை பறிமுதல் செய்வதுடன், விஜய் மீது வழக்கும் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட விஜய், உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தமிழகக் காவல்துறையின் தவறுகளை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க இருப்பதாகவும் தவெக வட்டாரங்கள் கூறகின்றன.
மேலும், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது காவல்துறையில் வழக்குகள் பதிவாகும்போது அவர்களுக்கு உதவ 20 வழக்கறிஞர்களைக் கொண்ட சட்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.