திருச்சி: கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, திங்கட்கிழமை (ஜூன் 1) அங்கு நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், திமுக, அதிமுக குறித்து கடுமையாக விமர்சித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் தெருவுக்குத்தெரு போதைப்பொருள் கலாசாரம் பரவிவிட்டதாக முதல்வர் விஜய் குற்றஞ்சாட்டினார்.
போதைப்பொருள் கலாசாரம் பெருகியதுதான் பல பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் அதனால்தான் தமிழகச் சகோதரிகளை இழக்கிறோம் என்றும் சாடிய அவர், லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி என்பது ஒரே நாளில் நடந்துவிடாது என்றார்.
ஆனால், நிச்சயம் ஒருநாள் அத்தகைய ஆட்சி அமையும் என்று குறிப்பிட்ட அவர், தவெக என்றுமே குதிரை பேரத்தில் ஈடுபட்டதில்லை என்றார்.
“திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதுதான் குதிரை பேரம்.
“அதிகாரம் செய்பவர்கள், ஆதிக்கம் செலுத்துபவர்கள்தான் கோட் சூட் போட வேண்டுமா? நாங்களும் போடுவோம். அதுவும் நாங்கள் அணியும் கறுப்பு வெள்ளை என்பது, நாங்கள் எப்படி வெளிப்படையாகச் செயல்படுகிறோம் என்பதை வெளிக்காட்டுகிறது,” என்றார் விஜய்.
தவெகவை ஆதரிப்போரை தற்குறி என்று விமர்சித்தவர்களின் அரசியல் வாழ்க்கைதான் தற்போது கேள்விக்குறி ஆகிவிட்டது என்றார் திரு விஜய்.
தொடர்புடைய செய்திகள்
“திமுகவின் இன்றைய நிலைக்கு காரணம் உங்கள் (மு.க.ஸ்டாலின்) குடும்பம்தான் என்று அக்கட்சித் தொண்டர்களே கூறுகின்றனர்.
“ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களுக்குத் தொந்தரவாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியுள்ளேன். ஒரு மாதக் காலத்தில் என்ன செய்ய முடியுமோ அதன் அடிப்படையில், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
“200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை விமர்சிக்கின்றனர். 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தது நீங்கள் அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. நிதிக்கான அனைத்து கதவுகளையும் நீங்கள் அடைத்து வைத்துவிட்டீர்கள். அதை முதலில் நாங்கள் சரிசெய்ய வேண்டும்,” என்றார் முதல்வர் விஜய்.
திமுக எதிர்ப்பு
இதனிடையே, எப்படியாவது முதல்வராகிவிட வேண்டும் என்ற, பதவி ஆசையில் விஜய் செயல்பட்டதை நாடறியும் என்று திமுக தலைமை விமர்சித்துள்ளது.
“அரசியல் தந்திரங்களையும் ஜனநாயக மாண்புக்கு எதிரான வேலைகளையும் செய்துவிட்டு, இப்போது திருச்சியில் ஏதோ மிகப் பண்பானவர் போலப் பொய்களை விஜய் அவிழ்த்துவிடுவதைப் பார்த்துத் தமிழ்நாடு சிரிக்கிறது,” என்று அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“முதல்வர் நாற்காலி வேண்டும், ஆனால் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றால் எப்படி?,” என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

