சென்னை: வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
ஏற்கெனவே திமுகவும் வேறு சில அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் இம்மசோதாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளன.
மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மசோதா நிறைவேற்றத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டமும் நடத்தப்பட்டது.
“இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து வக்பு உரிமைச் சட்டப் போராட்டத்தில் தவெகவும் பங்கேற்கும்” என விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வக்பு சட்டத்திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இண்டியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது.
இதையடுத்து, அதிபர் திரௌபதி முர்முவும் சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இம்மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் வழக்கு தொடுத்துள்ளதாக பாஜக சாடியுள்ளது.