தனித்து விடப்பட்டார் விஜய்: சீமான்

தனித்து விடப்பட்டார் விஜய்: சீமான்

1 mins read
5ce678d6-c20b-4079-90b8-20d75884aca3
சீமான். - படம்: தி ஹாக்

காரைக்குடி: நாம் தமிழர் கட்சியையும் தவெகவையும் ஒப்பிடக்கூடாது என்று சீமான் கூறியுள்ளார்.

ஆட்சியில் பங்கு என்றபோதிலும், தவெகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கவில்லை என்று காரைக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

“கூட்டத்தோடு நிற்பதற்கு யாருக்கும் வீரமும் துணிவும் தேவையில்லை. தனித்து நிற்கவே வீரமும் துணிவும் தேவை. நாங்கள் வீரர்கள் என்பதால் தனித்து நிற்கிறோம். நாங்கள் மக்களை முழுமையாக நம்புகிறோம். அவர்கள் கட்சியையும் தலைவர்களையும் நம்புகிறார்கள்,” என்றார் சீமான்.

விஜய் தனித்து நிற்பதாய் சொல்லவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், ஆட்சியில் பங்கு தருவதாய் எல்லோரையும் அழைத்துப் பார்த்தும் யாரும் வராததால் விஜய் தனித்து விடப்பட்டதாகக் கூறினார்.

“வரும்போதே ஆட்சியில் பங்கு என்றுதான் வந்தீர்கள். காங்கிரஸ் உள்பட பல கட்சிகளை எதிர்பார்த்தீர்கள். ஆனால் யாரும் வரவில்லை.

“எங்களது கட்சி தனித்துவமான கட்சி. எனவே தனித்து நிற்கிறோம். தவெகவுடன் எங்களை ஒப்பிட்டுப் பேசுவதை ஏற்க இயலாது,” என்றார் சீமான்.

குறிப்புச் சொற்கள்