தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய் கட்சியில் சேரும் பிரபலங்கள்; மாநாட்டில் அறிவிக்கப்படலாம்

1 mins read
c371f4d3-80fd-403b-b1b2-02f2ad3137aa
தமிழக வெற்றிக் கழகம் அதன் முதல் மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடத்தவுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

நடிகர் விஜய், வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, இந்த மாநாடு பார்க்கப்படுகிறது.

முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், 127 ஏக்கர் நிலத்தில் மாநாட்டின் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

விஜய், தனது கட்சியின் நோக்கங்கள், கொள்கைகள், திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் இடையே உரையாற்ற இருக்கிறார்.

கட்சி தொடங்கப்பட்ட பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். இந்த மாநாட்டில், விஜய்க்கு நெருக்கமான திரையுலகக் கலைஞர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்பர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சாராத பிரபலங்கள் சிலரையும் விஜய் தன் கட்சியில் இணைப்பது குறித்த அறிவிப்பை இந்த மாநாட்டில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்