தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார்: பெங்களூரு புகழேந்தி

2 mins read
bd40db21-fbd5-4c13-bd0f-5ab8887b87f5
பெங்களூரு புகழேந்தி. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: அதிமுகவின் கூட்டணியோடு தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் கூட்டணி அமைக்காது என அதிமுகவின் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேடையில்நின்றுகொண்டு, “அதோ பாருங்கள் கொடி” என த.வெ.க. கொடியைக் காண்பித்து அரசியல் செய்துவருகிறார்.

ஆனால், த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய், “பாஜக எங்களுக்கு எதிரி” என்று கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, த.வெ.க. கொடியைக் காண்பித்து வானுயரப் பறக்கிறது என்று கூறி வருகிறார். அக்கொடியை அதிமுகவினரே வைத்திருந்தனர். சொந்தக் கட்சிக்காரர்களை அடுத்த கட்சியின் கொடியைப் பிடிக்கச் செய்யும் அவமானம் அதிமுகவுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

எடப்படி பழனிசாமி அதிமுகவில் இருக்கும்வரை, அதிமுகவுடன் த.வெ.க. கட்சி கூட்டணி சேராது என்று திரு புகழேந்தி கூறியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு வலியுறுத்துமாறும், தவெக தலைவர் விஜய் நேரடியாகக் கரூருக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்றும் திரு புகழேந்தி கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ரோடு ஷோ நடத்தக் கூடாது எனக் கூறுகிறது. ஆனால், பழனிசாமி ரோடு ஷோ நடத்தி வருகிறார். அவருக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. மீண்டும், இதேபோல ஒரு துயரம் நடந்தால் யார் பொறுப்பேற்பது?, என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் சனிக்கிழமை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது,, “அரசியலில் தரம் தாழ்ந்து பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

விஜய் மதுரையில் நடந்த மாநாட்டில் எங்கள் தலைமையில் தான் ஆட்சி அமையும் என்றார். அப்படி இருக்கும்போது விஜய் தலைமையில் கூட்டணி அமைக்க பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவுக்கு அதிமுகவை தரம் தாழ்த்தி விட்டார். தன் கட்சித் தொண்டர்களை வைத்தே தவெக கொடியைத் தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்