ஆட்டம், பாட்டத்துடன் விஜய் குடும்பத்தார் கொண்டாட்டம்

ஆட்டம், பாட்டத்துடன் விஜய் குடும்பத்தார் கொண்டாட்டம்

1 mins read
8f335ef4-4d48-4ed2-a2c7-17ef986c32b5
தவெக நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகத் தெரியவந்ததும் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்தனர்.  - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெற்ற அதிரடி வெற்றியை அடுத்து, அக்கட்சித் தலைவர் விஜய்யின் குடும்பத்தார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திங்கட்கிழமை (மே 4) வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஓரிரு மணி நேரங்களில் முன்னணி நிலவரங்கள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கின.

இதில், தவெக நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகத் தெரியவந்ததும் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்தனர். இதேபோல் விஜய்யின் குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினர்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் நெருக்கமான சில உறவினர்கள் ஒன்றுகூடி தவெக வெற்றியைக் கொண்டாடும் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நேரலையில் ஒளிபரப்பாயின.

தவெக தேர்தல் பிரசாரக் காணொளியில் விஜய் இடம்பெற்றுள்ள காட்சிகளைக் கண்டு பரவசம் அடைந்த அவரது உறவினர்களும் குழந்தைகளும் அவருக்குத் திலகமிட்டு மகிழ்வதும் துள்ளிக்குதித்து நடனமாடும் காட்சிகளும் அக்காணொளிகளில் இடம்பெற்றுள்ளன.

மேலும், விஜய்யின் பெற்றோர் எஸ்ஏசி, ஷோபா சந்திரசேகர் ஆகியோருடன் உறவினர்கள் அமர்ந்திருப்பதும் அனைவரும் ஒருசேர ‘தவெக, தவெக’ என்று உற்சாகத்துடன் குரல்கொடுக்கும் காட்சியையும் காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்