தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு

1 mins read
744ea969-d964-4bde-bb76-a82a12d7eef6
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய். - கோப்புப் படம்: இணையம்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகக் (த.வெ.க) கட்சியின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

பல நூறாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற அம்மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க தயாராய் உள்ளது. இந்நிலையில், விஜய் ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிப் பள்ளிக்கு நேரில் சென்ற அவர், அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அவர்களுடன் நேரம் செலவிட்டு ராணுவ வீரர்களின் அனுபவங்களை கேட்டறிந்தார். நிகழ்வில் ராணுவ வீரர்களின் குடும்பத்தாரும் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்