தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது

1 mins read
873e6642-5f97-45d4-b7f4-0fca6c875bb4
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் தடம்புரண்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. - படம்: தினமணி

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்குச் சென்றுகொண்டிருந்த ரயில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.25 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த ரயிலில் இருந்து ஒரு பெட்டி தடம் புரண்டது.

அந்த ரயில் ஒரு வளைவுப் பகுதியைக் கடக்கும்போது, ​​ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டது. அதையடுத்து ரயில் ஓட்டுநர் அதைக் கவனித்து விரைவாக ரயிலை நிறுத்தியதால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

அதனால் விழுப்புரம் பாதையில் காலை 8.30 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. விழுப்புரம் - புதுச்சேரி மெமு என்பது சுமார் 38 கி.மீ. தூரம் மட்டுமே செல்லும் குறுகிய தூர ரயிலாகும்.

இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு வேறு வாகனங்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

ரயில் பெட்டி தடம்புரண்ட சம்பவம் தொழில்நுட்பக் கோளாற்றால் ஏற்பட்டதா அல்லது நாசவேலையா என விழுப்புரம் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்