62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

2 mins read
f97a88f8-6fce-4941-a180-70162044b61f
ஒரு மேசைக்கு 500 வாக்​கு​கள் என்ற விகிதத்​தில் அஞ்சல் வாக்​கு​கள் எண்​ணப்​படும். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 62 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்றும் முதலில் 8.15 லட்சம் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தலைமைத் தேர்தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

அஞ்சல் வாக்​கு​கள் எண்ணி முடிக்​கப்​பட்ட பிறகே, மின்​னணு இயந்​திரங்​களில் பதிவான வாக்குகளை எண்ணும் இறுதிச்சுற்று வாக்கு எண்​ணிக்கை தொடங்​கும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்​தல் பணிகளில் மொத்​தம் 3.60 லட்​சம் அலு​வலர்​கள் ஈடு​படுத்​தப்​பட்டனர் என்று தெரிவித்துள்ள அவர், வாக்​காளர்​களாகப் பதிவு செய்​து, வாக்​களிக்க விண்​ணப்​பித்த 2.88 லட்​சம் அலு​வலர்​கள் (80%) அஞ்சல் வாக்​கு​களைப் பதிவு செய்​துள்​ளதாகக் கூறியுள்ளார்.

தேர்​தல் பணிக்​காக நியமிக்​கப்​பட்ட காவல்துறை சார்ந்த அலு​வலர்​கள், மற்ற தேர்​தல் பிரிவு​களில் பணிபுரிந்த அலு​வலர்​கள், தேர்​தல் கண்​காணிப்புக் குழுக்​களில் பணி​யாற்​றிய அலு​வலர்​கள் என மொத்​தம் 3.36 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களாக​வும் 1.10 லட்​சம் அலு​வலர்​கள் தேர்​தல் பணி சான்​றிதழ் பெற்று நேரடி​யாக வாக்​குச்​சாவடி​யிலும் வாக்​களித்​துள்​ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்படும் அனைத்து மையங்களிலும் ஒரு பகு​தி​யில் அஞ்சல் வாக்குகளும் மற்​றொரு பகு​தி​யில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதி​வான வாக்​கு​களும் எண்​ணப்​படும் என்று கூறியுள்ள அவர், இந்தப் பணியை மேற்​பார்​வை​யிட உதவித் தேர்​தல் அலு​வலர் நிலை​யில் உள்ள அதி​காரி​கள் தனித்​தனியே நியமிக்​கப்​படு​வர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு மேசைக்கு 500 வாக்​கு​கள் என்ற விகிதத்​தில் காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்​கு​கள் எண்​ணும் பணி தொடங்​கும். மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதி​வான வாக்​கு​கள் எண்​ணும் பணி காலை 8.30 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடை​பெறும். எனினும், இதன் கடைசிச் சுற்​று வாக்​கு எண்​ணும்​ பணி, அஞ்சல்​ வாக்​கு​கள்​ எண்​ணி முடிக்​கப்​பட்​ட பிறகு​தான்​ தொடங்​கும்,” என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்