தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவமனையில் வால்டர் தேவாரம்

1 mins read
651bfd47-bc12-43a8-92c5-06d5a10810cd
முன்னாள் தமிழக காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம். - படம்: தினமலர் / இணையம்

சென்னை: தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி.யாகப் பதவி வகித்தவர் ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், 85.

சென்னை கீழ்ப்பாக்கம், மெக்னிக்கல் சாலைப் பகுதியில் வசித்துவரும் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு திரு தேவாரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தினமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துணிச்சல் மிகுந்த காவல்துறை அதிகாரியாகப் பார்க்கப்பட்ட திரு தேவாரம், ‘மூணாறில் இருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்.

1993ஆம் ஆண்டு பெரும் வெற்றிபெற்ற ‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்தின் பெயரான வால்டர் வெற்றிவேல், திரு வால்டர் தேவாரத்தின் பெயரைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்