ஒற்றுமையாகக் களமாடி ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றுவோம்: விஜய்

ஒற்றுமையாகக் களமாடி ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றுவோம்: விஜய்

1 mins read
e0c6aebf-452d-4e39-b213-8797dce1d246
விஜய். - படம்: தினசுவடு

சென்னை: அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி ஆட்சிப்பீடத்தை தவெக கைப்பற்றும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இலக்கை உறுதியாக அடைவோம் எனவும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவெகவின் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி விஜய் வெளியிட்ட அறிக்கை அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

அதில், இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும் இயல்பு தாண்டியும் நிறைவுசெய்து தவெகவின் அரசியல் பெரும் பயணம் நீடித்து வருவதாக விஜய் தெரிவித்துள்ளார்.

“முதன்மை அரசியல் கட்சியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாக கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்,” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்க இயலாத ஆழ்கடல் தவெக என்றும் அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும் சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர் முரசு தவெக என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்பதாகவும் இதற்கு தவெகவின் அரசியல் வருகைதான் ஒரே காரணம் என அனைவரும் சொல்வதாகவும் குறிப்பிட்டுள்ள விஜய், இந்தச் சூழ்நிலையில் களத்தை சாதகமாக்கி தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கி தவெக செல்ல வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்