சென்னை: எத்தகைய சோதனைகள் வந்தாலும் இருமொழிக் கொள்கையை விட்டுத்தர மாட்டோம் என பட்ஜெட் தாக்கல் செய்தபோது அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இது எதிர்கால வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தியாவிற்கு முன்னோடியாகத் தமிழ்நாடு திகழ்கிறது. பல்வேறு துறைகளில் மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது. இருமொழிக் கொள்கையால் தமிழர்கள் தடம்பதிக்கின்றனர்.
“தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். திருக்குறள் மொழிபெயர்ப்புக்கான தொகை உயர்த்தப்படும். புத்தகக் கண்காட்சி வெளிநாடுகளிலும் நடத்தப்படும்,” என்றார் தங்கம் தென்னரசு.
தொல்லியல் ஆய்வுக்கென ரூ.7 கோடி ஒதுக்கப்படும் என்றும் சிவகங்கை-கீழடி, சேலம்-தெலுங்கனூர், கோவை-வெள்ளலூர், கள்ளக்குறிச்சி-ஆதிச்சனூர், கடலூர்-மணிக்கொல்லை, தென்காசி-கரிவலம் வந்தநல்லூர், தூத்துக்குடி-பட்டணமருதூர், நாகப்பட்டினம் பகுதிகளில் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
[ο] 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
[ο] ஓலைச்சுவடிகள் பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு.
[ο] தமிழக பாடநூல் கழகத்திற்கு ரூ.120 லட்சம் ஒதுக்கீடு.
தொடர்புடைய செய்திகள்
[ο] மதுரையில் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
[ο] 193 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்.
[ο] ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும்.