தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒன்றிணைந்தால் அதிமுகவுக்கு வாழ்வு; இல்லையென்றால் தாழ்வுதான்: ஓபிஎஸ்

1 mins read
d7b3ff02-2b45-4af0-9469-f9a3e2503855
சசிகலா, ஓபிஎஸ். - படம்: ஊடகம்

சென்னை: எந்தவொரு நிபந்தனையும் விதிக்காமல் அதிமுகவில் தான் மீண்டும் இணைவதற்குத் தயார் என்று முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம், “2026 சட்டமன்றத் தேர்தலின் பொருட்டு ஒன்றிணைந்தால்தான் அதிமுகவுக்கு வாழ்வு. இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வுதான். நிபந்தனைகள் எதுவுமின்றி டி.டி.வி. தினகரன், சசிகலா, நான் உள்பட அனைவரும் அதிமுகவில் மீண்டும் இணைவதற்காகத் தயாராக இருக்கிறோம்.

“அமித் ஷா ஒன்றாக இருக்குமாறு பலமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி அதனை ஏற்றுக்கொள்ளாததால்தான் மோசமான சூழலை அதிமுக எதிர்கொண்டு வருகிறது. தொண்டர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

“செங்கோட்டையன் விசுவாசமானவர், எந்த நிலையிலும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என பாடுபடுபவர் அவர். செங்கோட்டையன் மீது எந்த அதிருப்தியும் எங்களுக்கு இல்லை.

“அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் உரிமை கோர முடியாது,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்