மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு

மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு

கோப்புப் படம்: தினமலர்

01 Nov 2026 - 1:28 pm

1 mins read

சென்னை: கிராமப்புறப் பெண்களின் பொருளியல் நிலையை மேம்படுத்தும் நோக்கில், ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு’ திட்டத்திற்காக ரூ.109.75 கோடியை ஒதுக்கீடு செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தின்மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த 30,000 தகுதியான பயனாளிகளுக்கு நூறு விழுக்காடு அரசு மானியத்தில் ஒவ்வொருவருக்கும் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.

2026-–27ஆம் நிதியாண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், கிராமப்புறங்களில் நலிவடைந்த பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய, ஆதரவற்ற பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் வாழும் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தின் முதன்மைப் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நூறு விழுக்காடு மானியத்தில் ஆடுகள் வழங்கப்படுவதால் பயனாளிகள் தொடக்க முதலீடு எதுவும் செய்யத் தேவையில்லை.

கால்நடைப் பராமரிப்புத்துறை மூலம் பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டு விரைவில் ஆடுகள் விநியோகிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்