சென்னை: அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு மத்திய அரசு ‘ஒய்’ (Y) பிரிவு சிறப்புப் பாதுகாப்பு வழங்க உள்ளதாக வெளியான தகவல், தமிழக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக தவெக தலைவர் விஜய்க்கு இத்தகைய பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.
அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக மூத்த தலைவர்கள் சிலரும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். இதையடுத்து பாஜக, அதிமுக இடையே கூட்டணி அமைந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், செங்கோட்டையனும் திடீரென டெல்லிக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு அமித்ஷாவை சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்ளதாக வெளியான தகவல் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய புலனாய்வு அதிகாரிகள், அவருக்குப் பாதுகாப்பு வழங்க பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.

