தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவல்துறை விசாரணையின்போது இளையர் உயிரிழப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

1 mins read
54e60013-9553-49b3-9441-748179b3ab59
(இடது) அஜித்குமார், அவரை அடித்து துன்புறுத்தும் காவல்துறை அதிகாரிகள். - படம்: ஊடகம்

சிவகங்கை: திருபுவனம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளையர் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவத்தையடுத்து, தமிழக எதிர்க்கட்சிகள் காவல்துறையின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கோவிலில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு தொடர்பாக அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவரை சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது.

மேலும், காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு வெளியே அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

இதில் அஜித்குமார் படுகாயமடைந்து உயிரிழந்தார். அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாக உடற்கூராய்வு செய்த மருத்துவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தமிழகக் காவல்துறை தலைவர் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி (அதிமுக), பிரேமலதா (தேமுதிக), அன்புமணி (பாமக), விஜய் (தவெக) உள்ளிட்ட பலரும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து இதில் தொடர்புடைய காவலர்கள் ஐந்து பேர் கைதாகினர்.

காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்