தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூடியூப் வருமானம்: தாயின் கனவை நிறைவேற்றிய பிரபல தமிழக யூடியூபர்

1 mins read
8d32884e-db82-40ef-aa16-3defe8b75e88
யூடியூப் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து தனது தாய்க்கு தங்க வளையல்கள், மோதிரம் வாங்கிக் கொடுத்துள்ளார் சுரேஷ் குமரன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பிரபயூடியூபர் சுரேஷ் குமரன், தனது தாயாருக்கு தங்க நகைகள் வாங்கிக் கொடுத்திருப்பதை பலரும் பாராட்டியுள்ளனர்.

யூடியூப் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து, தாம் நகைகளை வாங்கியதாக அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

‘சுரேஷ் குமரன் P.K’ என்ற பெயரில் யூடியூபில் இயங்கும் இவரை, ‘பிளாக்கி ஸ்டார் சுரேஷ் குமரன்’ என்று ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தனது யூடியூப் ஒளிவடிவில் வித்தியாசமாக நடனமாடி, ரசிகர்களை மகிழ்விக்கிறார் சுரேஷ் குமரன். இவரது ஆட்டத்தைப் பார்க்க தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

எனினும், எதிர்மறையான கருத்துகளைத்தான் பெரும்பாலானோர் பின்னூட்டமிடுகின்றனர். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல், நேர்மறை விமர்சனங்கள் மட்டுமே தன் கவனத்தைக் கவர்வதாகக் கூறி, தொடர்ந்து இயங்கி வருகிறார் சுரேஷ் குமரன்.

அடிப்படையில் இவர் ஆசிரியர் என்பதால், யூடியூப் மூலம் மாணவர்கள் பயன்படும் வகையில் கணிதம், தமிழ் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களையும் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமரன், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், யூடியூப் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து தனது தாய்க்கு தங்க வளையல்கள், மோதிரம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இவற்றை வாங்க வேண்டும் என்பதுதான் இவரது தாயாரின் நீண்ட கால கனவாக இருந்தது. பெற்ற தாயின் கனவை நிறைவேற்றிய சுரேஷ் குமரனுக்கு இணைய வெளியில் பாராட்டுகள் குவிகின்றன.

குறிப்புச் சொற்கள்