உக்ரேன் நகரின் தென் பகுதியான மெலிட்டோபோலைக் கைப்பற்றியதாக ரஷ்யா இன்று(பிப்ரவரி 26) தெரிவித்துள்ளது. மெலிட்டோபோல் நகரில் கிட்டத்தட்ட 150,000 பேர் வசிக்கின்றனர். ரஷ்ய ராணுவம் கடலிலிருந்து ஏவுகணைகளை உக்ரேன் மீது தொடுத்து வருகிறது.
ரஷ்ய படைகள் உக்ரேனுக்குள் ஊடுருவிச் சென்று கடும் தாக்குதலை நடத்தின. முதல் நாள் விமான தளங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவத் தளவாடங்களை ரஷ்யா குண்டு வீசி தகர்த்தாகத் தெரிவித்தது.
இரண்டாவது நாளாக நேற்று அதிகாலையிலேயே உக்ரேன் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்கள் மீதும் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதனால் உக்ரேனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா நேற்றே கைப்பாற்றியது.
அங்கிருந்து தாக்குதலை தீவிரப்படுத்தி தலைநகர் கியவ் நோக்கி ரஷ்ய படைகள் நகர்ந்தன.
தலைநகர் கியவ் அருகே உள்ள காஸ்டோமல் விமான தளத்தை நேற்று இரவு ரஷ்யா கைப்பற்றியது. அங்கு ஹெலிகாப்டர்கள் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை ரஷ்யா தரை இறக்கியது. இதனால் உக்ரேன் அந்த பகுதிக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பியது.
இதற்கிடையே நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தலைநகருக்குள் உக்ரேன் ராணுவம் வர முடியாதபடி ரஷ்யா தடையை ஏற்படுத்தியது

