காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு, குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்

காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு, குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்

1 mins read

இந்த நிலையில், விமான நிலையத்துக்கு வெளியே தாலிபன்களும், விமான நிலையத்துக்கு உள்ளே ஆப்கன் படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

-

ஆப்கானிஸ்தான் தலிபான்வசமாகிவிட்டதால், அதன் ஆட்சிப் பிடியிலிருந்து தப்பிக்க விரும்பி, பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். அவ்விமான நிலையத்திலிருந்து இதுவரை 82,000க்கும் மேற்பட்டோர் விமானங்கள் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 31ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் தங்களது குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை பல நாடுகளும் விரைவுபடுத்தியுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் நேற்றும் காபூல் விமான நிலைய நுழைவாயில்களின்முன் ஏராளமானோர் திரண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

-

இந்நிலையில், காபூல் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதை அமெரிக்காவின் ராணுவ தளமான பென்டகன் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தனது ட்விட்டர் பக்கத்தில், "காபூல் விமானநிலையத்திற்கு வெளியில் குண்டு வெடிப்பு நடந்துள்ளதை உறுதிப்படுத்துகிறோம். ஆனால், அங்கு உயிரிழப்பு பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. தகவல் கிடைத்தவுடன் தெரியப்படுத்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.