துவாஸ் எரியாலையில் வெடிப்பு: ஒருவர் மரணம், இருவருக்கு கடுமையான காயங்கள்

1 mins read

துவாஸ் எரியாலையில் இன்று நடந்த வெடிப்புச் சம்பவத்தில், 65 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

அதோடு 59, 64 வயதுகளுடைய இரண்டு பேர், தீப்புண் காயங்களுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

துவாஸ் அவென்யூ 20ல் அமைந்துள்ள ஆலையில், பிற்பகல் 3.15 மணியளவில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின்கீழ் செயல்படும் ஆலையில் மின்விசை அறை ஒன்றில் பராமரிப்புப் பணியின்போது வெடிப்புச் சம்பவம் நேர்ந்தது.

புகை சூழப்பட்ட அறைக்குள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) அதிகாரிகள் சென்று ஆங்காங்கே காணப்பட்ட தீயை அணைத்ததாகக் கூறப்பட்டது.

கிட்டத்தட்ட 80 பேர் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்துள்ளது.

தீச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

Watch on YouTube