தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர்: மார்ச் 29 முதல் வெளிப்புறத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல

1 mins read

வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் வெளிப்புறத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படாது. சமூக ஒன்றுகூடல்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக இடம்பெறலாம். மேலும் வேலை இடத்தில் பணிபுரிவோரில் 75% பேர் மீண்டும் அலுவலகம் திரும்பலாம்.

இந்த விவரங்களை பிரதமர் லீ சியன் லூங் இன்று அறிவித்தார். நேரடி ஒளிபரப்பு மூலம் மக்களிடம் அவர் இன்று காலை 11 மணிக்குப் பேசினார்.

1,000 பேருக்கு மேலான எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொள்ளும் பெரிய நிகழ்ச்சிகள் 75% பேருடன் நடைபெறலாம். உள்புறத்தில் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும்.

சிங்கப்பூர், அதன் கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் திருப்புமுனையை அடைந்திருப்பதாகப் பிரதமர் லீ தமது உரையில் தெரிவித்துள்ளார்.

அது குறித்து கிருமித்தொற்றுடன் வாழும் சூழலை நோக்கிச் செல்ல உறுதியான முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

Watch on YouTube