பிரதமர் லீ: துவாஸ் கப்பல் துறைமுகம் அதிகாரபூர்வ திறப்பு, சிங்கப்பூர் பொருளியலின் முக்கிய உந்துசக்தி

பிரதமர் லீ: துவாஸ் கப்பல் துறைமுகம் அதிகாரபூர்வ திறப்பு, சிங்கப்பூர் பொருளியலின் முக்கிய உந்துசக்தி

1 mins read

சிங்கப்பூரில் 2040ஆம் ஆண்டு முழுமை பெறவுள்ள மிகப் பெரிய கப்பல் துறைமுகம் இன்று (செப்டம்பர் 1) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது மூன்று கப்பல் நிறுத்தும் இடங்களுடனும் கிட்டத்தட்ட 500 ஊழியர்களுடனும் துறைமுகம் செயல்படுகிறது.

$20 பில்லியன் செலவில் கட்டப்படவுள்ள இந்த துவாஸ் கப்பல் துறைமுகம் கிட்டத்தட்ட முழுமையாக தானியக்க இயந்திரங்களைக் கொண்டு செயல்படவுள்ளது.

Watch on YouTube

துறைமுகம் முழுமை பெற்றவுடன் அதனால் 20 அடி அளவுள்ள 65 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும்.

இன்று துறைமுகத்தைத் திறந்து வைத்த பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக துறைமுகம் திகழும் என்றார். இது சிங்கப்பூரை அனைத்துலக கப்பல், கடல் துறை நிலையமாக மறுஉறுதி செய்யும் என்றும் கப்பல் நிதி, கடல்துறை காப்புறுதி, லடல்துறை சட்டம் ஆகிய துறைகளும் வளர வழிவகுக்கும் என்றார்.