விசாக தினத்தில் பெளத்த ஆலயங்களில் நிரம்பிய மக்கள் கூட்டம்

விசாக தினத்தில் பெளத்த ஆலயங்களில் நிரம்பிய மக்கள் கூட்டம்

1 mins read

விசாக தினமான ஞாயிற்றுக்கிழமை (மே 15) அன்று சிங்கப்பூரின் பெளத்த ஆலயங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் இரண்டு ஆண்டுகளாக பௌத்த சமயத்தினர் விசான தினத்தன்று ஆலயங்களுக்குப் பெருமளவில் சென்று வழிபட முடியாத நிலை இருந்தது.

ஆனால் இன்று நிலை மாறியிருந்தது.

ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள சகாயமுனி புத்தகயா ஆலயத்தில் வழிபட பலர் காலையிலேயே வந்திருந்தனர்.

-

1930களில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் உள்ள 15 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையை மக்கள் வணங்கினர்.

"ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் விசாக தினத்தன்று இந்த ஆலயத்துக்கு வருவேன். ஆனால் கடந்த ஈராண்டுகளாக கொவிட்-19 கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் என்னால் வரமுடியவில்லை. இவ்வாண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் மனநிறைவுடன் வழிபாடு செய்ய முடிந்தது." என்றார் திருவாட்டி மகேஸ்வரி, 49.

-

அதே போல சிங்கப்பூர் சிங்கள பெத்தர் சங்கம் நடத்தி வரும் ஸ்ரீ லங்க ராமாயா பௌத்த ஆலயத்திலும் நல்ல கூட்டம்.

-

பக்தர்கள் புத்தரின் சிலைகளுக்கு முன் பூக்களையும் விளக்குகளையும் வைத்து வேண்டினர்.

-

குறிப்பாக, பல புத்த ஆலயங்களில் காணப்படும் புனித போதி மரத்தை சுற்றி இருந்த நான்கு புத்த சிலைகளுக்கு தங்கள் காணிக்கைகளை வழங்கி பக்தர் வழிபாடு செய்தனர்.

பௌத்த ஆலயங்களில் விசாக தினத்தை உணவும் வழங்கப்பட்டது.