சிறிய விமானமாக மாறி ஆகாயத்தில் பறக்கும் காரை ஸ்லோவேகியாவின் கிளெய்ன் விஷன் நிறுவனம் வடி வமைத்துள்ளது.
தீவிரச் சோதனையில் 70 மணி நேரம் வெற்றிகரமாக பறந்த 'AirCar' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பறக்கும் காருக்கு ஸ்லோவேகியா போக்குவரத்து ஆணையம், விமானத் தகுதிக்கான சான்றிதழை வழங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டி லிருந்து பறக்கும் காரை வடி வமைக்கும் முயற்சிகளில் கிளெய்ன் விஷன் ஈடுபட்டு வருகிறது. தற்போது அதன் கனவு ஓரளவு நனவாகியுள்ளது.
கிளெய்ன் விஷன் நிறுவனரான பேராசிரியர் ஸ்டீபன் கிளெய்ன், பறக்கும் கார்களைத் தயாரிப்பதற்கு ஏர் காருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் ஊக்குவிக்கிறது என்றார்.
ஏர்கார், கடுமையான சோதனை களுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே சான்றிதழ் வழங்கப்பட்டது.
இருநூறுக்கும் மேற்பட்ட மேலே எழும்புவது, கீழே தரையிறங்குவது உள்ளிட்ட சோதனைகளை அது கடந்து வந்துள்ளது.

