மாணவர் வருங்காலத்தை வளமாக்கும் திட்டங்கள்

மாணவர் வருங்காலத்தை வளமாக்கும் திட்டங்கள்

2 mins read
0c3f11f7-056e-4bc7-9c47-0a46494dd19f
-

வைதேகி ஆறுமுகம்

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்களுக்கென சிறப்பான இரு திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. தலைமைத்துவ, வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றை மாண வர்களிடையே வளர்க்கச் செய் யும் இத்திட்டங்கள் அவர்களின் கல்விப் பயணத்திற்கும் வருங் கால வேலைச் சூழலுக்கும் பய னுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர், கல்வி, நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.

அங் மோ கியோ தொழில் நுட்பக் கல்விக்கழகத்தில் நேற்று இத்திட்டங்களைப் பற்றிய மாண வர்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் கலந்துரையாடல் மூலம் கேட்டறிந்தார் சிண்டாவின் தலைவருமான குமாரி இந்தி ராணி. இக்கலந்துரையாடலில் சுமார் 200 மாணவர்கள் பங் கேற்றனர்.

இவ்வாண்டின் சிறப்பு அம்சமாக அங் மோ கியோ தொழில்நுட்பக் கல்விக்கழகத் துடன் கிழக்கு மற்றும் மேற்கு தொழில்நுட்பக் கல்விக்கழகங் களிலும் இந்நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டு வருகின்றன. சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் 'எஸ் பயர்' என்னும் 10 வார நிகழ்ச் சியில் இதுவரை 70 மாணவர்கள் கலந்துகொண்டனர். நிபுணத்துவம் பெற்ற நடன பயிற்றுப்பாளர்களைக் கொண்டு நடத்தப்படும் நடன பயிற்சி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான கல்வி, உரையாடும் திறன்கள் ஆகியவற்றுடன் தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற வாழ்க்கை நெறிகளும் கற்றுக்கொடுக்கப்படு கின்றன.

4ஆம் ஆண்டாக நடத்தப்படு கின்ற தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைமைத்துவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் தொடங்கி நவம்பரில் முடிவடை யும். தலைமைத்துவ முகாம், கலந்துரையாடல்கள், வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக்கொள்வ தற்கான வகுப்புகள் ஆகியவற் றை வழங்கும் இந்த ஐந்து மாத நிகழ்ச்சியில் இவ்வாண்டு 29 மாணவர்கள் பங்கேற்றனர்.

தொழில்நுட்பக் கல்விக்கழகத் தின் மாணவர்கள் பொதுக்கூட் டங்களில் உரையாற்ற தயங்குவ தால் அவர்களுக்குத் தன்னம் பிக்கையை ஊட்டுவதற்காக இத் திட்டங்களை இளையர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக குமாரி இந்திராணி பகிர்ந்து கொண்டார்.