பரந்த சமூக இலக்கு தேவை : அமைச்சர் இந்திராணி ராஜா

1 mins read
4d753c00-3e83-4c0b-84c6-e55ec58864cb
-

வைதேகி ஆறுமுகம்

மக்கள்தொகை மூப்படைந்து வரும், பல இன, பல கலாசார சிங்கப்பூரில் ஒருவருக் கொருவர் உதவும் அடிப்படையிலான பரந்த சமூக இலக்கு அவசியம் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண் டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா வலியுறுத்தியுள்ளார். முதுமைக் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ உதவும் நோக்கத்துடன் மக்கள் ஒரே சமூகமாகச் சேர்ந்து செயல்படவேண்டியது தேவையான ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

தேங் ரோட்டில் இருக்கும் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் நேற்று நடந்த பெருநடை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்ட அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா, நாட்டின் தேவைகளை நன்கு புரிந்துகொண்டு நன்கொடை வழங்கி வரும் செட்டியார்கள் கோவில் குழுமத்தை மேற்கோள்காட்டினார். மற்ற அமைப்புகளும் பரந்த சமூக இலக்கைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். செட்டியார்கள் கோவில் குழுமம், வசதி குறைந்தோரின் சுகாதார பராமரிப்பு தேவை களை நிறைவேற்றுவதற்காக இயந்திர சக்கர நாற்காலிகளையும் மனநலம் குன்றியோருக் கான 'சன்லவ்' இல்லத்திற்கு $130,000 விலையிலான இலவச நடமாடும் மருத்துவச் சேவைக்கான முதலுதவி வண்டியையும் நேற் றைய நிகழ்ச்சியில் கொடையாக வழங்கியது.

பொதுமக்கள் சுமார் 500 பேரும் 50 தொண்டூழியர்களும் கலந்துகொண்ட பெரு நடை நிகழ்ச்சியில் குமாரி இந்திராணி ராஜா, 4 கி.மீ. தூரம் நடந்து பலரோடும் கலந்துறவாடி மகிழ்ந்தார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண் டதன் மூலம் மக்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததாக அமைச்சர் கூறினார்.