ரொக்கமில்லா வழியில் கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு திட்டத் திற்கும் ஒவ்வொரு விரைவுத் தகவல் (கியூஆர்) குறியீட்டை வர்த்தகர்கள் இனி காட்சிப் படுத்த வேண்டியிராது. கிராப்பே, டேஷ், நெட்ஸ் உட் பட மொத்தம் 27 இணைய வழி கட்டணம் செலுத்தும் செயலி கள் மூலம் 'ஸ்கேன்' செய்து, பணம் பரிமாற்றம் செய்ய ஏது வாக சிங்கப்பூர் விரைவுத் தகவல் குறியீடு (எஸ்ஜிகியூஆர்) எனும் தேசிய அளவிலான பொது விரைவுத் தகவல் குறியீடு நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
அதேபோல, வங்கிகளுக்கு இடையிலான உடனடிப் பணப் பரிவர்த்தனை முறையை இனி கிராப், சிங்டெல் போன்ற வங்கி யல்லா நிறுவனங்களும் பயன் படுத்த முடியும்.
கல்வி அமைச்சரும் சிங்கப்பூர் நாணய ஆணைய இயக்குநரு மான ஓங் யி காங் நேற்று இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். கடைசி சில 'புதிர்த் துண்டு களையும்' ஒன்றிணைத்து சிங் கப்பூர் தனது தேசிய ரொக்க மில்லாக் கட்டண முறையை முழுமையாகக் கட்டமைத்துவிட்ட தாக திரு ஓங் குறிப்பிட்டார். 'எஸ்ஜிகியூஆர் (SGQR)' தொடர்பான தொழில்நுட்ப விவ ரங்கள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து அந்த 27 நிறு வனங்களும் தங்களது கட்டண அமைப்புகள் அதை ஏற்றுக்கொள் ளும் வகையில் மாற்றங்களைச் செய்தன. இதையடுத்து, 'எஸ்ஜி கியூஆர்' முறை வர்த்தக ரீதியில் அறிமுகம் காணத் தயாராக உள்ளது.
'டோஸ்ட் பாக்ஸ்' காப்பிக் கடையில் 'கியூஆர்' குறியீட்டைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

