சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பின்னிரவு மின்தடை ஏற்பட்டதில் குடியிருப்பாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 150,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். தங்களது வீடுகள் இருளில் மூழ்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். தெரு விளக்குகள் எரியாமல் போனதால் வாகன ஓட்டுநர்கள் சாலைகளில் கவனத்துடன் வாகனங்களை ஓட் டினர். மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து எரிசக்தி சந்தை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. பிடோக் முதல் ஜூரோங் வரை தீவின் 19 பகுதிகளில் பின்னிரவு 1.18 மணிக்கு மின்தடை ஏற்பட்டதாக எரிசக்தி வழங்கும் நிறுவனம் எஸ்பி குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 38 நிமிடங்களுக்குள் மின்சார விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியது.
இருப்பினும், வாடிக்கையாளர் கள் சிலர் மின்தடையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டதாக பின்னர் தெரிவித்த எஸ்பி குழு மம், இதில் சம்பந்தப்பட்ட கட்ட டங்களுக்கு உதவி வழங்கிய தாக தெரிவித்தது. மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களிலிருந்து மின்சார விநியோகம் தற்காலிகமாக தடைப்பட்டதே மின் தடைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக எஸ்பி குழுமம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது சொன் னது.
பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதைத் தொடர்ந்து மின்சாரக் கட்டமைப்பு சீரான நிலையில் உள்ளதாகவும் மின்தடை குறித்த விசாரணை தொடர்வதாகவும் அக்குழுமம் கூறியது. பூன் லே, சுவா சூ காங், கிளமெண்டி, ஜூரோங், பாண்டான் லூப், அல்ஜுனிட், கேலாங், தஞ்சோங் ரூ, மவுண்ட்பேட்டன், கெம்பாங்கான், பிடோக், ஈஸ்ட் கோஸ்ட், அங் மோ கியோ, பீஷான், தாம்சன், மண்டாய், அட்மிரல்ட்டி, செம்பவாங், உட் லண்ட்ஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 146,797 குடியிருப்பு மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. மின்தடையால் இங் டெங் ஃபோங் மருத்துவமனையும் ஜூரோங் சமூக மருத்துவமனையும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. இருப்பினும், அந்த மருத்துவமனை களில் உள்ள 'ஜெனரேட்டர்கள்' இயக்கப்பட்டதால் சேவைகளுக்கோ நோயாளி பராமரிப்புக்கோ பாதிப்பு ஏற்படவில்லை.

