இணையப் பாதுகாப்பு மையத்திற்கு ஆதரவு

இணையப் பாதுகாப்பு மையத்திற்கு ஆதரவு

1 mins read
38f88741-94f5-4308-ad9a-6aee38d7e012
-

சிங்கப்பூரிலும் ஆசியானிலும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத் தல்களைக் கையாளும் நிபு ணர்களுக்குப் பயிற்சி அளிக்க அரசாங்கம், புதிய நிலையம் ஒன்றை தனது முழுச் செலவில் உருவாக்க உள்ளது. புதிய நிலையம் அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கப்படும். 'ஆசியான்= சிங்கப்பூர் இணையப் பாதுகாப்புக்கான உன்னத நிலையம்' என பெயரிடப்பட்டுள்ள இந்நிலையத் திற்கு 30 மில்லியன் வெள்ளி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் செலவிடப்படும். இந்த வட்டாரத்தின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் உலகளவில் ஏற்படும் இணைய அச்சுறுத்தல் களை ஆசியான் எதிர்கொள் வதற்கும் இந்த நிலையம் அமைக் கப்படுகிறது. நேற்று நடைபெற்ற இணையப் பாதுகாப்பு தொடர்பான ஆசியானின் அமைச்சர் நிலை மாநாட்டின் திறப்பு விழா வில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உரையாற்றினார்.

அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆசியான் இணைய பாதுகாப்பு மாநாட்டில் உரை ஆற்றுகிறார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு