பூங்கா சூழலில் குழந்தைப் பராமரிப்பு நிலையம்

பூங்கா சூழலில் குழந்தைப் பராமரிப்பு நிலையம்

2 mins read
cc29ddfd-c26d-4b3c-ad59-f7da959ed6cf
-

புக்கிட் பாஞ்சாங்கில் செகார் சாலையில் அமைந்துள்ள 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' குழந்தைப் பரா மரிப்பு நிலையத்தில் சேர்ந்துள்ள பிள்ளைகள், இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவில் உல்லாச மாக நடந்து வரலாம். செங்ஹுவா இயற்கை பூங்கா வில் 3,000 சதுர மீட்டர் பரப்ப ளவில் அமைந்துள்ள இந்த நிலையம் நேற்று அதிகாரபூர்வ மாகத் திறக்கப்பட்டது. இதில் 400 பிள்ளைகள் வரை சேரலாம். சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் ஒன்பது பெரிய குழந்தைப் பரா மரிப்பு நிலையங்களில் இதுவும் ஒன்று. அதுவும், பூங்கா ஒன்றில் அமைந்திருக்கும் இரண்டாவது அத்தகைய நிலையமாகவும் இது விளங்குகிறது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளின் வெற்றுத் தளங்களில் அமைந்துள்ள குழந்தை ப் பராமரிப்பு நிலையங்களைவிட பெரிய நிலையங்களில் மூன்று முதல் ஐந்து மடங்கு வரை அதிகளவிலான பிள்ளைகள் சேர முடியும். இத்தகைய பெரிய நிலை யங்கள், குழந்தைப் பராமரிப்புச் சேவைகளுக்கு அதிக தேவை உள்ள பகுதிகளில் அமைக்கப்படுகி ன்றன. ஈசூன், உட்லண்ட்ஸ், ஜூரோங் வெஸ்ட், செங்காங், பொங்கோல் ஆகிய வட்டாரங்களில் மற்ற பெரிய நிலையங்கள் அமைந்து உள்ளன. புக்கிட் பாஞ்சாங்கில் திறக்கப் பட்டிருக்கும் இப்புதிய நிலைய த்தில் சேர்ந்துள்ள பிள்ளை களையும் சேர்த்தால், தீவு முழுவ தும் 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பள்ளிகளில் சேர்ந்துள்ள பிள்ளை களின் எண்ணிக்கை 20,000ஆக உள்ளது.

புக்கிட் பாஞ்சாங்கின் செங்ஹுவா இயற்கை பூங்காவில் அமைந்திருக்கும் 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' குழந்தைப் பராமரிப்பு நிலையம் (வலக்கோடி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்