எஸ்.வெங்கடேஷ்வரன்
இந்திய மாணவர்களையும் இந் திய சமுதாயத்தின் உயர்வையும் கொண்டாடுவது சிண்டாவின் உன்னத விருதுகளின் நோக்கம் என்றும் படிப்பைத் தவிர விளை யாட்டு, கலை போன்று மற்ற துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை அங்கீகரிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறினார். சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்ற சிண்டாவின் உன்னத விருது கள் விழாவில் கலந்துகொண்டு அவர் பேசினார். "திறன்மிக்க மாணவர்களை வாழ்த்தும் இவ்விழாவில், வாழ் வில் சவால்களை எதிர்நோக்கும் மாணவர்களையும் நாம் மறக்கக் கூடாது.
"பெரும்பாலும் இவர்கள் குறைந்த வருமான பின்ன ணிகளிலிருந்தும் சவால்மிக்க குடும்ப, சமுதாய சூழ்நிலைக ளிலிருந்தும் வருகிறார்கள். "ஒரு சமுதாயமாக, எவரும் பின்தங்கிவிடமால் இருக்க நாம் முயற்சிகள் எடுக்கவேண்டும்," என்று மேலும் தெரிவித்தார் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைவரு மான குமாரி இந்திராணி.

