ப.பாலசுப்பிரமணியம்
தீபாவளி ஒளியூட்டு விழாக்களில் யானை, சிங்க உருவங்கள் கடந்த சில ஆண்டுகளில் லிட்டில் இந்தி யாவை அலங்கரிக்க, இவ்வாண்டு அன்னப் பறவைகள் வீதியெங்கும் அம்சமாகக் காட்சி அளிக்கின்றன. அவை அவ்வாறு காட்சியளிப் பதற்கு லிட்டில் இந்தியாவில் சுமார் இரண்டு மில்லியன் 'எல்இடி பல்பு' கள் ஏழு வண்ணங்களில் ஜொலிப் பதுதான் காரணம். அன்னப்பட்சி கருப்பொருளு டன் தீபாவளி கொண்டாட்டங்களை லிட்டில் இந்தியாவில் நேற்று இரவு தொடங்கி வைத்தார் சிறப்பு விருந் தினரான அதிபர் ஹலிமா யாக் கோப்.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் (லிஷா) இந்த ஒளியூட்டு விழாவை 2001ஆம் ஆண்டிலிருந்து ஏற்பாடு செய்து வருகிறது. "கிட்டத்தட்ட 64 நாட்களுக்கு இங்கு தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டவிருக்கின்றன. "பொதுமக்கள் கொடுக்கும் ஆதரவாலும் சுற்றுப்பயணிகளாலும் ஆண்டுக்கு ஆண்டு இன்னும் சிறப்பாக இக் கொண்டாட்டங்கள் விரிவடைந்துள்ளன," என்று கூறி னார் லிஷா தலைவர் திரு ராஜ் குமார் சந்திரா. "தீபாவளிக்குப் பொருட்களை வாங்க வரும் அதே சமயம் ஏற்பாடு செய்யப்பட்ட இதர நடவடிக்கை களிலும் பொதுமக்கள் கலந்து கொள்வர் என்று நம்புகிறோம்," என்றும் அவர் கூறினார்.
தீபாவளி ஒளியூட்டு விழாவில் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் சமூகத் தலைவர்களும். படம்: த.கவி

