கிராப், ஊபர் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் மொத்தம் $13 மில்லியன் அபராதம் விதித்து இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் இணைந்ததற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இணைப்பு காரணமாக ஊபர் நிறுவனத்தின் தென்கிழக்காசிய வட்டாரத் தொழில் உரிமை கிராப் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. கிராப் நிறுவனம் சுமார் $6.4 மில் லியன் அபராதமும் ஊபர் நிறுவனம் $6.58 மில்லியன் அபராதத்தையும் செலுத்தவேண்டும்.
இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு காரணமாக வாடகை வாகனத் தொழில்துறையில் போட்டித் தன்மை குறைந்துவிட்டதாக இந்த ஆணையம் விளக்கம் அளித்து தன் னுடைய முடிவை உறுதிப்படுத்தியது. போட்டித்தன்மை சட்டத்தின் 54வது பிரிவை அந்த இணைப்பு மீறிவிட்ட தாகவும் ஆணையம் தெரிவித்தது. அபராதம் விதித்திருப்பது ஒருபுறம் இருக்க, சந்தையைத் திறந்துவிட வேண்டும் என்றும் சந்தையில் புதிதாக வருவோருக்கு நியாயமான ஏற்பாட்டை கட்டிக்காக்கவேண்டும் என்றும் இரு நிறுவனங்களுக்கும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊபர் நிறுவனம் மார்ச் மாதம் ஓர் அறிவிப்பை விடுத்தது. சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவி லிருந்து தான் வெளியேறிவிடப்போவ தாகவும் இந்த வட்டாரத்தில் உள்ள தனது தொழிலை கிராப் வாங்கிக் கொள்ளும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது. இதற்குக் கைமாறாக அந்த நிறுவனம் கிராப்பில் 27.5% பங்குகளைப் பெறும்.
இந்த உடன்பாடு பற்றி சிங்கப்பூரின் வணிகப் போட்டித்தன்மை, பயனீட் டாளர் ஆணையம் புலன்விசாரணை யைத் தொடங்கியது. விசாரணை ஜூலை 5ஆம் தேதி முடிவடைந்தது. இதனிடையே, கிராப், ஊபர் நிறுவனங்களுக்குப் போட்டித்தன்மை ஆணையம் பிறப்பித்த விதிமீறல் உத்தரவைத் தான் ஆதரிப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

