உணவுக்கடை தொடங்கும் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு

உணவுக்கடை தொடங்கும் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு

1 mins read
17961429-23ca-48dc-b48b-85ba6deb0c52
-

உணவுக்கடை வியாபாரத்தில் ஆர்வமுள்ளோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தேசிய சுற் றுப்புற அமைப்பு இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியதிலிருந்து தற்போது மொத்தம் 15 கடைகள் இதில் இணைந்துள்ளன. இது குறித்து நேற்று சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் பேசினார். சந்தை நிலவரத்திற்கு ஒப்ப பாதியளவு வாடகையை மட்டுமே இத்திட்டத்தின் கீழுள்ள உணவுக்கடை வியாபாரிகள் ஆறு மாதங் களுக்குச் செலுத்த வேண்டும். அ

த்துடன் துருப்பிடிக்காத அலமாரி அடுக்குகள், வேலை செய்வதற்கான இடவசதி, குளிர் சாதனப் பெட்டிகள், காட்சிக்கான அலமாரி அடுக்குகள், நீர்த்தொட்டி முதலிய அடிப்படை உபகரணங் களும் இவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பொதுவாக இந்த உபகரணங் களை வியாபாரிகள் தங்கள் சொந்த செலவில் வாங்கவேண்டும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிப் போர் ஒரு குறிப்பிட்ட தகுதி நிலையைப் பெற்றிருக்க வேண்டும். திட்டத்தின்கீழ் பத்து கடைகள் தற்போது இன்னமும் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிய உணவங்காடித் திட்டத்தின்கீழ் இணைந்துள்ள கோழிச்சோறு விற்கும் கடைக்காரர்களுடன் சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்