மனித மூலதனத்தில் சிங்கப்பூர் முதலிடம்

மனித மூலதனத்தில் சிங்கப்பூர் முதலிடம்

2 mins read
7e97f63d-3525-490c-b117-5937e9c92bc6
-

சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகிய துறைகளில் சிங்கப்பூர் உலகில் முதலிடத்தைப் பெற, இங்கு பணக்கார ஆசியர்கள் காரணம் அல்ல. மாறாக நாட்டின் தலைவர்கள், உரிய நடவடிக் கைகள் எடுத்து அத்துறைகளை மேம்படுத்தியதே காரணம் என்று உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் பாராட்டியுள்ளார். மனித மூலதன உச்சநிலை மாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகிய துறைகளில் உலகத் தலைவர்கள் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தினார்.

பிரதமர் லீ சியன் லூங்குடனான கலந்துரையாடலில் திரு ஜிம் பங்கேற்றார். சிங்கப்பூரின் தொடக்ககாலத் தலைவர்கள் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், சுகாதாரப் பராமரிப்பு, கல்வித் துறைகள் ஆகியவற்றில் மேற் கொண்ட நடவடிக்கைகளைத் திரு ஜிம்முடன் பிரதமர் லீ பகிர்ந்து கொண்டார். "இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 50 ஆண்டு களுக்கு முன்னர் சிங்கப்பூர் பணக்காரர்களை அதிகம் கொண்டிருக்கவில்லை," என்று திரு ஜிம் 'கிரேஸி ரிச் ஏ‌ஷியன்' என்ற படத்தை உதாரணம் காட்டிப் பேசினார்.

"கல்வியறிவுடையோர் குறை வாகவும் வளர்ந்து வரும் நாடு களில் காணப்படும் மரண எண் ணிக்கையையும் கொண்டிருந்த சிங்கப்பூரை இன்றைய நிலைக்கு உயர்த்த அதன் தலைவர்கள் பொறுப்பேற்று, 'இலக்கை நோக்கிச் செல்வோம், அனைத்து புத்தாக்க முயற்சிகளிலும் ஈடுபடுவோம்' என்று முனைந்து செயல்பட்டது காரணம் என்றார் திரு ஜிம்.

பிரதமர் லீ சியன் லூங்குடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம். சிங்கப்பூரின் சிறப்புக்கு நாட்டின் தலைவர்களே காரணம் என அவர் புகழாரம் சூட்டினார். படம்: ஏஎஃப்பி