இன்னும் ஈராண்டுகளில் அமைதியான, சொகுசு நிறைந்த பயணங்கள்

1 mins read
80d7a45a-10c3-4df5-88d8-9129b3af34f3
-

இன்னும் ஈராண்டுகளில் 60 மின்சாரப் பேருந்துகள் சிங்கப்பூர் சாலைகளில் செல்வதைக் காண லாம். அந்தப் பேருந்துகள் மூலம் சத்தமில்லாத சொகுசு நிறைந்த பயணத்தை அவற்றில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. இப்பேருந்துகள் 50 மில்லியன் வெள்ளி செலவில் உருவாகும் என்றும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

மின்சாரப் பேருந்துகள் அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு வரத் தொடங்கும் என்றும் 2020 ஆம் ஆண்டில் இறுதிக்கட்ட பேருந்துகள் வந்து சேரும் என்றும் தெரிவித்த ஆணையம், பேருந்துகள் சேவை புரிய வேண்டிய வழித் தடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றது. சந்தையில் தற்போது நிலவும் வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கும் நோக்கில் பல தரப்பட்ட விநியோகிப்பாளர்களுக் காக ஆணையம் ஏலக்குத்தகையை வழங்கி உள்ளது. பிஒய்டி (சிங்கப்பூர்) என்னும் நிறுவனம் 20 ஓரடுக்கு மின்சாரப் பேருந்துகளை விநியோகிக்கும். இதற்கான ஏலக்குத்தகை தொகை $17 மில்லியன். வாகனத் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி சீனாவின் ஷென்ஷென் நகரைத் தளமாகக் கொண்டது.

அறுபது பேருந்துகளில் பத்து மட்டும் ஈரடுக்குப் பேருந்துகள். எல்லா மின்சாரப் பேருந்துகளிலும் தகவல் வெளியிடும் திரை இருக்கும். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்