காலாங் - பாய லேபார் விரைவுச் சாலைக்கும் தெம்பனிஸ் விரைவுச் சாலைக்கும் விரைவாகச் செல்லும் வகையில் புதியதொரு சாலை நேற்று மாலை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது. நீட்டிக்கப்பட்டிருக்கும் பொங் கோல் சென்ட்ரல் ரோட்டை ஹாலுஸ் லிங்க்கும் பின் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயை நோக்கிச் செல்லும் காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையும் இணைக்கிறது. பின் அவ்வழியாக வாகனமோட்டி கள் சாங்கியை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச் சாலையையும் விரைவாக அடையமுடியும்.
தெம்பனிஸ் விரைவுச்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, $185 மில்லியன் செல வில் இடம்பெற்று வரும் காலாங்- பாய லேபார் விரைவுச்சாலை -தெம்பனிஸ் விரைவுச்சாலை குறுக்குச் சந்திப்பை விரிவுபடுத் தும் பணிகளின் ஒரு பகுதியே இது. மெய்நிகர் மாதிரியமைப்பு, முன் வார்ப்புக் கட்டுமானம் ஆகிய தொழில்நுட்பங்களின் உதவியால் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு முன்னதாகவே சாலைப் பணிகள் நிறைவுபெற்றன.
புதிய சாலையை நேற்று திறந்துவைத்து குடியிருப்பாளர்களுடன் அச்சாலையில் நடந்துசெல்கிறார் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

