ஜனவரி 1 முதல் புகையற்ற பகுதியாக ஆர்ச்சர்ட் ரோடு

ஜனவரி 1 முதல் புகையற்ற பகுதியாக ஆர்ச்சர்ட் ரோடு

1 mins read
cb38df08-05fa-48b3-ae5e-0a821352fe24
-

அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆர்ச்சர்ட் ரோடு புகையற்ற பகுதியாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை புகைபிடிக்க வேண் டும் என்றால் அதற்குரிய இடத்துக் குச் சென்று புகைபிடிக்கலாம் என் றும் ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் உள்ள உணவகங்களில் புகைபிடிப் பதற்கான இடங்கள் ஒதுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பற்றி பொதுமக் களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் தெரிவிக்க தேசிய சுற்றுப்புற வாரி யம் ஆர்ச்சர்ட் ரோடு பகுதிகளின் பல இடங்களில் அறிவிப்புப் பல கைகள், பதாகைகளை வைப்ப துடன் ஊடகங்களில் விளம்பர முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது.

ஆர்ச்சர்ட் ரோடு புகையற்ற பகுதியாக மாற்றப்படும் என்று முதலில் கடந்த ஆண்டு அறிவிக் கப்பட்டது. பின்னர் அது இவ் வாண்டு ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அங்குள்ள வர்த்தகங்கள் இந்தப் புதிய தடைக்குத் தங்க ளைத் தயார்ப்படுத்திக்கொள்ள அது அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப் பட்டது. இம்மாதம் 22ஆம் தேதி வரை அந்தப் பகுதியில் புகைபிடிக்க 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் வாரியம் சொன்னது.