சிங்கப்பூரர்களிடையே வாழ்நாள் கற்றலை ஊக்குவிப்பதற்காக 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்' (எஸ்எஸ்ஜி) என்ற அரசாங்க அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தொடர்பாக சந்தேகத் திற்குரிய பணக் கோரிக்கைகள், அவற்றைக் கோருகின்ற தரப்பு கள், தரப்புகளுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது என மோசடி, அமலாக்கப் பிரிவு ஒன்றை அமைத்துள்ளதாக எஸ்எஸ்ஜி நேற்று அறிவித்தது.
இதற்காக பொதுத் துறையில் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற் படுத்துவதுடன் தனியார் துறை களின் ஆலோசகர்களுக்கும் தரவு பகுப்பாய்வுகள் கொண்டு மோசடி யைக் கண்டறியும் அமைப்பைக் கொண்ட சிங்கப்பூர் அரசாங்க தொழில்நுட்ப அமைப்புடன் எஸ்எஸ்ஜி, இணைந்துள்ளது. கட்டணங்களுக்கான கோரிக் கைகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக இயந்திர வழிமுறைகள் உருவாக் கப்படும்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சந்தையில் வேலைவாய்ப்புகள் பற்றி அறிந்துகொள்ள வந்தவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

